Sunday, September 7, 2008

Melmaruvathur Maragatham

மரகதமே என்று நினைத்தவுடன் எனதம்மை மருவத்தூர் மந்திர நாயகிதான் மனதிற்குள் நுழைகிறாள்..!! உண்மைதானே .... மாய மந்திரம் அறியாத உன்னதமான மனத்தில் உன்மத்த நடனமாடுபவள் அவளன்றி வேறு யார்...!!...உன்னதம் என்ற சொல்லுக்கு உயர்ந்த விளக்கமே அவள்தான்...!! உயர்ந்ததோர் ஆசனத்தில் அமர்ந்து அகத்தில் உயர்ந்தோர்க்கு அருளை அள்ளி அள்ளி வெள்ளமாக வழங்குபவள் ..!! அம்மா வருவாயா என்று கேட்பதற்குமுன்பே நமக்கு முன்னர் பிரத்யக்ஷமாகிவிடும் பெரும் வள்ளல் அவள்..!! வள்ளல் என்றால் சாதாரணமான வள்ளல் இல்லை...வல்லமை தரும் வள்ளல்...வளமை தரும் வள்ளல்..வன்மை தரும் வள்ளல்..வாக்குதிறம் தரும் வள்ளல்..வரம் தரும் வள்ளல்...வாஞ்சையை தரும் வள்ளல்..அள்ள அள்ள பெருகும் அமுதசுரபியவள்...!! அம்மா..கொடு என்றால்..கொடுத்தேனே என்று நம்மிடம் திருப்பி கேட்பாள்..!!!...நீ கேட்டதை மறந்தாயோ மகனே...!!...நான் கொடுத்து மிக நேரம் ஆகியதே என்று நாம் கேட்டதை நமக்கே நினைவுபடுத்துபவள் ...!!..அவள் தருவதை யாரும் தடுப்பதுமில்லை..தடுக்க நினைப்பதும் இல்லை...தருவதற்காகவே தரணியில் வேரூன்றியவள்..தர்மத்தை காக்க வேம்பாய் அவதரித்து ....பாம்பாய் உருவெடுத்து...அக்னி பிழம்பாய் ஆரோகணித்து...அருள் குழம்பாய் ..குழவி நம்மை குழந்தாய் என்று அன்பை ஊட்டி....அருளை காட்டி..அருகிலே வைத்து அழகு பார்ப்பவள்..!!..அன்னையின் இலக்கணத்துக்கு இலக்காய் இருப்பவள்..!!!...அன்னையே என்று அழைக்க அருகாமையில் இருப்பவள்..!! அம்மையே என்றால்....எம்மையா அழைத்தாய் என்று வாஞ்சையாய் வருபவள்..!! தாயின் தார்மீக குணங்கள்தான் எத்தனை எத்தனை ...!! அம்மம்மா...அவள் அருளுக்கு அளவு ஏது..அளவுகோல் ஏது..அளக்கவும் முடியுமா...!!!அளக்க முடியாத அளவுக்கு அசைக்க முடியாத அற்புதம் அவள்..!! அற்புதம் அவளுக்கு ஒருகணம்தானே..!! ஒருகணத்தில் ஒருயுகத்தையே ஆட்டி படைப்பவள்...!! ஒருகணத்தில் கோடி கோடி மனத்துள் ஆட்சி செய்பவள்..ஒரு கணத்தில் கோடி கோடி மனத்துள் மகிமையை காட்டுபவள்..!! ஒரு கணத்தில் கோடி பாவத்தையும் ஓடி ஒளிய செய்பவள்..!!..ஓங்கார வடிவான அன்னை ஓடி வந்து கோடி கோடி மக்களின் பாவங்களையும் பழிகளையும் தனதாக கருதி ஏற்கிறாள்...ஏற்பதோடு மட்டுமில்லாமல் அதனில் இருந்து விலக்கி வாழ்வில் ஏற்றத்தையும் தருகிறாள்...!!! பாவத்தை புனிதமாக்கும் பவித்ரமானவளும் புனிதமும் அவளே...!!அவளின் முக மண்டலம் ஒன்றே நம் பாவ மண்டலங்களை பொடியாக்கும் அருள் மண்டலம்..!! அருள் விழியின் ஒளியே...நமது இருள் உள்ளத்தை ஒளிர செய்யும் ஒளி மண்டலமாகும்..!!! நாத ஒலியாக..நாத பிழம்பாக..நாதமே உருவான யம்பிராட்டியின் செவ்வாயில் இருந்து உதிரும் முத்துக்களை ... கேட்பதற்கு கோடி புண்யம் செய்திருக்க வேண்டுமே...!!! அத்தனை அற்புதமான மதுர வாக்விலாசிநியவள் ...!! வசீகரம் என்ற சொல்லுக்கு வசங்கரியாய் இருப்பவள்..!! காமனின் தாயான அவள்...கண்ணாலேயே...கோடி வசந்தத்தை வசீகரம் செய்பவள்..கோடி கோடி குழந்தைகளின் மனத்தில் ஆசனிப்பவல்...!! கோடி மனத்தை நொடியில் வசீகரம் செய்பவள்...!!! வசீகரம் செய்வதில் அவள் அவனின் குழந்தை காமனை மிஞ்சுபவள்..!! மிஞ்சி தரும் வஞ்சியவள்..!! வாஞ்சையை வேரோடு வார்த்து ஆறாக மனத்தில் பாய்ச்சுபவள்..!!!...அஞ்சாதே மகனே என்று அருகிருந்து ஆசுவாச படுத்தும் அஞ்சுக மொழியவள்..மஞ்சுள மேதையவள்..!!! பசுமையான மரகதத்தின் ஒளியாக...குளிரை மனதிற்கு ஏற்படுத்தும் மணியாக....மனத்திற்கு வலிமையை தரும் மஹிமையாக .... உன்னத ரத்தினமான மரகதமாக ...மருவூரில் குடிகொண்டிருக்கிறாள் அன்னை அகிலாண்ட கோடி பிருமாண்ட நாயகி ஆதிபராஷக்தி...!! அவளின் சிவந்த ...செந்தாமரை நாணும் அருள் தாமரையான ...அருளை அள்ளி வெள்ளமாக வழங்கும் பாதத்தை அனுதினம் அடக்கத்துடன் அண்டி பாசத்துடன் ..பரிவுடன் ...பணிந்தால்..பராஷக்தி பரிவோடு நமை காப்பாள் ...கற்பகமாய் கருணையை பொழிவாள் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை...!!அகிலம் காக்கும் அன்னையே..கருணை கற்பகமே...!! பணிந்தோம் உன் பதமே...!!!

No comments: