Saturday, September 6, 2008

Maruvoor Mahimai

மருவூர் என்றாலே மஹிமை என்பதுதான் எனது மிக தாழ்வான கருத்து. அம்பாள் ஆதிபராஷக்தி அங்கு ஆரோகணித்திருக்கும் அழகும் ஆசனமும் மிக தெய்வீகமான காட்சி. அவளின் கண்களை கண்டு இன்புறும் இன்பம் வேறு எதற்கும் ஈடாக இருக்க முடியாது...!!..கண்களில் வழியும் அருள் வெள்ளம் ..கருணை வெள்ளம் ...அணை போட்டாலும் அதன் பிரவாகம் கட்டுக்கடங்காது...!! தாய்கெல்லாம் தாயான அவளின் தாயன்பு...சொல்லில் அடங்காது...மன்னிப்பாய் என்று அவளிடம் மண்டியிட்டால்..கட்டாயமாக மன்னிக்கும் மகிமைதான் அம்மை ஆதிபராசக்தி..!!
எனது வாழ்க்கையில் ...நான் அன்னையின் அற்புதங்களை அன்றாடம் பார்கிறேன்..பேசும் தெய்வம் அவள்...!! பேசாதவர்களை பேச வைப்பவள்..பாடாதவர்களை பாட வைப்பவள்...எழுதாதவர்களை எழுத வைப்பவள்...!! கல் மனத்தை கரைய வைப்பவள்...வன் மனத்தை வளைய வைப்பவள்..முள் மனத்தை மலராக்குபவள்....மலரினும் மெல்லிய மனம் கொண்ட அம்மையின்..மனம்..,,.மனம் உருகி அவளை பணிந்தால்...மடியில் வந்து அமர்ந்து கொள்வாள்...!! அத்தனை இரக்க குணமும்..பரந்த மனமும்....எதையும் பொறுக்கும் தாயன்பும்...அவளின் விலாசங்கள்..!!!...மூக்குத்தி ஒளியில்..மயங்காத மனமும்..உள்ளதோ..? எம்பெருமாட்டியின் அலங்காரத்தையும்..அழகு லாவண்யதையும்...காண கண் கோடி வேண்டும்...!! அற்புதத்தை அப்போதே அரங்கேற்றம் செய்பவள்..!! மரகத வடிவான அன்னை அவள்...மரகதம் போன்ற பசுமையே அவள் மனம்...!! மரகதம் போன்ற மன உறுதியளிக்கும் ரத்தினமே அவள்..!! எதற்கும் கலங்காத மனத்தை கொடுப்பவள்...நான் இருக்கிறேன் உன்னை காக்க என்று மார் தட்டி சொல்லும் பக்தியை மனதிற்கு கொடுக்கும் மந்திர மரகதமவள்..!! மருவூர் மரகதமே என்று அழைக்க அருகில் வந்து ..என்ன வேண்டும் மகனே என்று கேட்பவள்..!! மாசிலா வீணையின் நாதம் போல தூய்மையானவள் ...!! மாணிக்க மரகத ஒளி போன்ற தேக காந்தியையுடையவள்..!! முத்தும் வைரமும் போன்று மாசிலாதவள்...!!..நீலக்கல் போல நீண்ட கண்மலரை கொண்டவள்..!! புஷ்பராகம் ஒத்த மங்கள ஆடை அணிந்தவள் ...!!..பவளம் போன்ற மதுர மொழி பேசும் தாமரை இதழ் கொண்டவள்..!!..கோமேதகமும்..வைடூர்யமும் சேர்த்து கோர்த்து ...தங்கத்தினால் ஆன...அணிகலன்களை ...தங்க நிற அங்கத்தில் ...பங்கம் இல்லாத என் அன்னை அணிபவள்..!!!....பாலும் ...தோற்கும் முத்து பல்லினை உடையவள்...!!!...மாதுளம் தோற்கும்..செவ்வாய் அழகினை உடையவள்..!! அவள் திருவாயிலிருந்து உதிரும் முத்துக்களை கோர்க்க...நம் கைக்கு வலிமை இருக்கிறதா...!!ஆனால்...அதே கைக்கும் வலிமையை தருவாள்...அன்னை ஆதிபராசக்தி...!!...வாக்கினை ஆளும் எம்பெருமாட்டி எழுது என்று சொல்லும்போது...அதற்கு குறுக்கில் நிற்க நாம் யார்....!!! எழுத்தும் அவளே ..எழுதுபவளும் அவளே...!!..எழுத்தாகி நிற்பவளும்.அவளே...எழுந்து வந்து காப்பவளும் அவளே...!! ஏழைக்கு இறங்குபவளும் அவளே...!! எழுபிறவிக்கு முக்தி தருபவளும் அவளே...!! ஏழு ஸ்வரமும் அவளே...!!! ஏழை என் எழுத்தும் அவளே...!! கருத்தில் நிற்கும் கற்பகம் அவளே...மனத்தில் நிற்கும் மரகதம் அவளே..நெஞ்சில் நிற்கும் நீலாயதாக்ஷியும் அவளே...!!..கொஞ்சி பேசும் கோமளமும் அவளே..!!..அஞ்சல் தரும் அபயாம்பிகை அவளே..!! கருணை கடல் காமாட்சியும் அவளே..!! மதுர மொழியாள் மீனாக்ஷியும் அவளே..!! மாந்தரை காக்கும் காந்திமதியும் அவளே..!!!சிந்தனையில் சிந்தும் சிவகாமியும் அவளே..!! அஞ்சுக மொழி அபிராமியும் அவளே..!!..கமல விழி கமலாக்ஷியும் அவளே..!! காக்கும் கர்ப்ப ரக்ஷாம்பிகையும் அவளே..!!! லாவண்யம் மயங்கும் லலிதாவும் அவளே..!! புவனத்தை காக்கும் புவனேஸ்வரியும் அவளே..!! அகிலத்தை காக்கும் அங்காள பரமேஷ்வரியும் அவளே..!!...அவளே..அனைத்துக்கும் ஆதாரம் அவளே...!!! அவள் கருணைக்கு அளவில்லையே..!! அளவில்லாமல் அருளை பொழியும் அன்னையின் அருளை பற்றி சொல்வதற்கு வார்த்தைகள் புதியதாக தோன்ற வேண்டும்...!! உன்மத்தமான அவள் உன்னதம் வாழ்க...!!! வாழ்க மேல்மருவத்தூர் தாயே மரகதமே...!! மங்காத செல்வமே...!!! ..ஆல் போல் நின் அருள் பரந்திருக்க..அதில்..ஒரு ஓரம் நிழலுக்கு ஒதுங்கும்..இந்த பரம பாவி ஏழையை உன் சேவைக்காக ஏற்று கொள் தாயே...தயாபரி...!!..ஒதுங்கினேன் என்று சொன்னதால் என்னை ஓரம் கட்டி ஒதுக்கி விடாதே...நீயும் ஒதுக்கினால்...ஒடுங்குவது ஒன்றே கடைசியாக இருக்கும்...அதுவும் உனதருகே...உன்னை கண்டு கொண்டே... உன் குளிர் நிழலில் தான் இருக்கும்..தாயே...!!...

No comments: